அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
காரைக்குடியில் இருந்த ஏவிஎம் ஸ்டூடியோவை மெய்யப்ப செட்டியார் சென்னைக்கு மாற்றினார். புதிய ஸ்டூடியோவில் தயாராகும் முதல் படத்தை தானே இயக்க விரும்பினார். அப்போது அவர் பா.நீலகண்டன் எழுதிய ஒரு கதையை அங்கீகரித்து அவரையே இயக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் தானே அந்த படத்தை இயக்கினார். அந்த படம் 'வாழ்க்கை'.
1939ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'பேச்சிலர் மதர்' . அதை தழுவி உருவான ஹிந்தி திரைப்படமான குன்வாரா பாப் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவானது. காதலன் ஏமாற்றி விட்டதால் அவன் மூலம் பிறந்த குழந்தையை பணக்கார பெண்ணான நாயகியின் காரில் அநாதையாக விட்டுச் செல்கிறாள் ஒரு பெண். அந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நாயகிக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வைஜெயந்திமாலா, டி.ஆர்.ராமச்சந்திரன், கே.சாரங்கபாணி, எஸ்.வி.சஹஸ்ரநாமம், எம்.எஸ்.திரௌபதி, குளத்து மணி, சுப்பையா, பி.டி.சம்பந்தம், வி.எம்.ஏழுமலை, கே.என்.கமலம், எஸ்.ஆர்.ஜானகி உள்பட பலர் நடித்தனர். ஆர்.சுப்பாராமன் இசை அமைத்திருந்தார்.
இந்த படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது, ஒரு வருடத்திற்கு பிறகு கேவா கலருக்கு மாற்றப்பட்டு வெளியானது. 'ஜீவிதம்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'பாஹர்' என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீ மேக் ஆனது. வைஜயந்திமாலா இந்த படத்தின் மூலம் புகழ்பெற்றார்.