என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ரஜினி நடித்த முக்கியமான படங்களில் ஒன்று 'நல்லவனுக்கு நல்லவன்'. இந்த படத்தில் அதுவரை ஹீரோவாகவே நடித்து வந்த கார்த்திக் வில்லனாக நடித்தார். அவருடன் ராதிகா, துளசி, விசு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
கதைப்படி நல்லவரான ரஜினியிடம், கடனில் மூழ்கி கொண்டிருக்கும் தனது கம்பெனியை ஒப்படைத்து விட்டு இறந்து விடுவார் முதலாளி. ரஜினி அந்த கம்பெனியை கஷ்டப்பட்டு உழைத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவார். இது கம்பெனி முதலாளியின் மகன் கார்த்திக்கிற்கு பிடிக்காது. அவர் பல வழிகளில் ரஜினிக்கு தொல்லை கொடுப்பார்.
கடைசியில் ரஜினி நல்லவர் என்று கார்த்திக் உணர்வார். அப்போது தன் பெயரில் உள்ள கம்பெனி சொத்துக்களை கார்த்திக்கிடம் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது படத்தின் கதை.
ரஜினி, கார்த்தியிடம் சொத்துக்களை கொடுத்து விட்டு தனது மனைவி ராதிகாவின் படத்தை மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டு செல்வதாக கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டு விட்டது. படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணனுக்கு இந்த கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை, இந்த கிளைமாக்ஸ் நல்ல உருக்கமாக இருக்கிறது. எல்லோரும் அழுது கொண்டே தியேட்டரை விட்டு வருவார்கள். ரஜினி ரசிகனை நாம் ஏன் அழவைக்க வேண்டும்.
அதனால் கிளைமாக்சை மாற்றுங்கள், ஒரு பெரிய சண்டை காட்சிக்கு பிறகு ரஜினி, கார்த்தியை காப்பாற்றி சொத்துக்களை கொடுத்து விட்டுச் செல்வதாக கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்றார். இதனை எஸ்.பி.முத்துராமன் ரஜினியிடம் சொல்ல 'சூப்பர்... சூப்பர் அப்படியே செய்யலாம்' என்றார்.
இதனால் கார்த்திக்கை வில்லன் கடத்தி சென்று தாக்குவது போன்றும் ரஜினி சண்டைபோட்டு அவரை காப்பாற்றவது போன்றும் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு பின்னர் படம் வெளியிடப்பட்டது. படமும் பெரிய வெற்றி பெற்றது. படம் வெளியான மறுநாள் ரஜினி ஏவிஎம் சரவணனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.