மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

சென்னையின் பாரம்பரியமிக்க தியேட்டர்கள் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களாகி அதன் அடையாளத்தை இழந்து வருகிறது. பல தியேட்டர்கள் சுவடே தெரியாமல் இடிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பாரம்பரியமிக்க ஏவிஎம் ஸ்டூடியோவின் பல பகுதிகள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டு விட்டது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் குறிப்பாக சினிமா கலைஞர்கள் அதிகமாக வாழும் வட பழனியின் அடையாளமாக இருந்த ஏவிஎம் ரஜேஸ்வரி தியேட்டர் இடிக்கப்பட்டு வருகிறது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தனது மனைவி ராஜேஸ்வரி பெயரில் கட்டத் தொடங்கிய தியேட்டர், அவரது மறைவிற்கு பிறகு 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியன்று திறக்கப்பட்டது. இந்த தியேட்டரில் ஆரம்பத்தில் டிக்கெட் கட்டணம் 2 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. கடைசி கட்டணம் 60 ரூபாய்.
நல்ல நிலையில் செயல்பட்டு வந்த தியேட்டர் கொரோனா காலத்தில் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. இதனால் கொரோனா சமயத்தில் மூடப்பட்ட பல தியேட்டர்களின் பட்டியலில் இந்த தியேட்டரும் இணைந்தது. ஏ.வி.எம். நிர்வாகத்தினர், அந்த இடத்தை ஒரு கட்டுமான நிறுவனத்திடம் விற்றுவிட்டனர்.
தற்போது அந்த நிறுவனம் பல அடுக்கு மாடிகளை கொண்ட அலுவலம் மற்றும் குடியிருப்பை கட்டுகிறது. அதன் கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக தியேட்டரை இடிக்கும் பணியை தொடங்கி உள்ளது. தியேட்டரோடு மலரும் நினைவுகளை கொண்ட திரைப்பட கலைஞர்களும், ரசிகர்களும், இடிக்கப்படும் தியேட்டரை வேதனையோடு பார்த்துச் செல்கிறார்கள்.