ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் தயாராகி கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்தப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார். படத்தில் பத்து நண்பர்களில் ஒருவராக நடித்திருந்த சவ்பின் சாஹிர் என்பவர் தான், தனது பறவ பிலிம்ஸ் மூலமாக பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தார். 20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் மலையாள சினிமாவில் முதன்முறையாக 200 கோடி வசூலைத் தொட்ட படம் என்கிற பெருமையையும் பெற்றது.
இந்த நிலையில் சிராஜ் வலையதாரா என்பவர் இந்த படத்தின் தயாரிப்புக்காக தான் ஒன்பது கோடி ரூபாய் கொடுத்ததாகவும், படம் வெளியான பின் லாபத்தில் தனக்கு நாற்பது சதவீதம் பங்கு தருவதாக கூறப்பட்டதாகவும் ஆனால் இப்போது தயாரிப்பாளர்கள் அதை தர மறுத்து பின்வாங்குவதாகவும் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது குறித்து விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், அதுவரை அவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு மலையாள திரையுலகில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.