ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படத்தில் அனிருத் இசையில், விஷ்ணு எடவன் எழுதி, சுபலாஷினி, அனிருத், அசல் கோலார் பாடிய 'மோனிகா' பாடல் கடந்த மாதம் ஜுலை 11ம் தேதி யு டியூப் தளத்தில் வெளியானது. இப்பாடலுக்கு பூஜா ஹெக்டே சிறப்புத் தோற்றத்தில் நடனமாடி இருந்தார்.
பாடல் வெளியானதுமே உடனடியாக ஹிட் ஆனது. மிகக் குறுகிய காலத்தில் இப்பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. படம் வெளியாகும் வரை இப்பாடலுக்கு 68 மில்லியன் பார்வைகள் கிடைத்திருந்தது. படம் வெளியான இந்த பத்து நாட்களில் மட்டும் 32 மில்லியன் பார்வைகள் கிடைத்து 100 மில்லியனைக் கடந்துள்ளது.
யு டியூப் தளத்தில் அனிருத் இசையில் வெளிவந்த பாடல்கள் அதிகமான 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது 'மோனிகா' பாடலும் இணைந்துள்ளது.