பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' |
தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும், திரைக்கதை அமைப்பில் வித்தகராகவும் அறியப்படும் இயக்குநர் கே பாக்யராஜ், ஒரு இயக்குநர் என்பதையும் தாண்டி, நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர், இசையமைப்பாளர் என்ற பன்முகத் தன்மையோடு பல காலம் வெள்ளித்திரையில் ஒரு தனிப்பெரும் ஆளுமையாக பயணித்து வந்தவர். ஏதும் அறியாத ஏமாலி போல் முகத்தை வைத்துக் கொண்டு, எல்லாம் அறிந்த நாயகனாக தன்னைக் காட்டிக் கொள்வதுதான் இவரது தனித்துவமிக்க நடிப்பாற்றல். அப்படி நகைச்சுவையோடு, இவர் நடித்து, இயக்கியிருந்த அனைத்து திரைப்படங்களும் பெரும்பாலும் வெற்றித் திரைப்படங்களாகவே அறியப்பட்டிருந்தன.
“சுவர் இல்லாத சித்திரங்கள்”, “மௌன கீதங்கள்”, “இன்று போய் நாளை வா”, “அந்த 7 நாட்கள்”, “தூறல் நின்னு போச்சு”, “டார்லிங் டார்லிங் டார்லிங்”, “முந்தானை முடிச்சு”, “தாவணிக் கனவுகள்”, “சின்ன வீடு”, “எங்க சின்ன ராசா” என இவரது தனித்துவமிக்க நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசை நீண்டு கொண்டே செல்லும். அந்த வகையில் மிகுந்த கவனத்தோடும், சிரத்தையோடும் இவர் எடுத்த ஒரு திரைப்படம்தான் “அவசர போலீஸ் 100”.
1977ம் ஆண்டு எம் ஜி ஆர் மற்றும் இயக்குநர் சி வி ஸ்ரீதர் இவர்களது கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற “மீனவ நண்பன்” திரைப்படத்திற்குப் பின், அதே கூட்டணியால் உருவாக்கப்பட்ட மற்றுமொரு திரைப்படம்தான் “அண்ணா நீ என் தெய்வம்” என்ற திரைப்படம். எம் ஜி ஆர், லதா, எம் என் நம்பியார், சங்கீதா, வி எஸ் ராகவன், பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனால் நான்கு பாடல்களும் பதிவு செய்யப்பட்டு, அதில் இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பும், வேறு சில காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டிருந்தது.
ஏறக்குறைய 4000 அடி வரை வளர்ந்திருந்த இத்திரைப்படம், 1978ல் எம் ஜி ஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்றபின் திரைப்படத் துறையிலிருந்து அவர் விலகும் நிலை ஏற்பட்டு, அந்தப் படம் மேலும் வளராமல் நின்று போனது. படத்தின் தயாரிப்பாளரான எஸ் துரைசாமிக்கு உதவும் பொருட்டு, எடுத்திருந்த அந்த 4000 அடி படத்தினை இயக்குநர் கே பாக்யராஜ் போட்டுப் பார்த்துவிட்டு, பின் எம் ஜி ஆரின் அனுமதி பெற்று, அவரே தலைமையேற்று, சிறப்பு விருந்தினராக வந்திருந்து, ஏ வி எம் ஸ்டூடியோவில் இந்த “அவசர போலீஸ் 100” திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் ஆரம்பிக்கப்பட்டது.
“அண்ணா நீ என் தெய்வம்” திரைப்படத்தில் நடித்திருந்த எம் என் நம்பியார், சங்கீதா, வி எஸ் ராகவன் ஆகியோர் “அவசர போலீஸ் 100” திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில், நடிகை லதா அவரது திருமணத்திற்குப் பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்திருந்ததால், அவர் மட்டும் இத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. எம் ஜி ஆர் என்ற ஆளுமையின் பிம்பம் எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் மிகுந்த கவனத்தோடு படப்பிடிப்பை நடத்தி முடிக்க ஆண்டுகள் நான்காயின. எம் ஜி ஆர் மறைந்து ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பின்னர்தான் இத்திரைப்படமே வெளிவந்தது.
எம் ஜி ஆர், லதா, எம் என் நம்பியார், சங்கீதா மற்றும் பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்த “அண்ணா நீ என் தெய்வம்” திரைப்படத்தின் சில காட்சிகளைப் பயன்படுத்தி, அதற்குத் தகுந்தாற்போல் வேறொரு கதை எழுதி, அந்தக் கதையில் இந்தப் படத்தின் பகுதியை இணைத்து, ஒரு முழு கதையாக, வெகுஜன மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு திரைப்படமாக தர முடியும் என்பதை இத்திரைப்படத்தில் நிரூபித்துக் காட்டி, ஒரு இயக்குநராக வென்றிருப்பார் கே பாக்யராஜ்.
'மெல்லிசை மன்னர்' எம் எஸ் விஸ்வநாதன் இசையில் எம் ஜி ஆருக்கான இரண்டு பாடல்களோடு, கே பாக்யராஜின் இசையிலும் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருந்தன இத்திரைப்படத்தில். எம் ஜி ஆர் என்ற ஆளுமையின் திரைப்படத்தில் தானும் பங்கேற்றிருக்கின்றோம் என்ற பெருமையோடும், முதன் முதலாக கே பாக்யராஜ் இரட்டை வேடமேற்று நடித்த திரைப்படம் என்ற அறிவிப்போடும் வந்து, பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்ற திரைப்படமாக அமைந்ததுதான் இந்த “அவசர போலீஸ் 100”.