ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்கள், அவரைப் பற்றிய ரெபரன்ஸ் ஆகியவை தற்போது வெளியாகும் புதிய படங்களில் இடம் பெற்றால் அந்தப் படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் சாதனை படைக்கும் என்ற ஒரு சென்டிமென்ட் உருவாகிவிட்டது.
சமீபத்தில் தமிழில் வெளியான அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தில் அவரது மூன்று பாடல்களைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குனரோ, அல்லது படத்தின் நாயகன் அஜித்தோ இளையராஜாவை நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரது பாடல்களைப் பயன்படுத்த அனுமதி கேட்டிருக்க வேண்டும் என்ற கருத்துதான் அதிகம் இருந்தது.
மலையாள சினிமா உலகில் இளையராஜாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள் என்பது சமீபத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'தொடரும்' படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும். படத்தில் கார் டிரைவரான மோகன்லால் இளையராஜாவின் ரசிகராக நடித்திருப்பார். இளையராஜாவைப் பாராட்டிப் பேசிய வசனமும் படத்தில் இடம் பெற்றது. அவரது பாடல்களை அவரிடம் முறையாக அனுமதி பெற்று பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்காக அவரை நேரில் சந்தித்து படத்தின் கதையைப் பற்றிச் சொல்லி அனுமதி வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர். 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மலையாள சினிமாவில் பெரும் வசூல் சாதனையைப் படைத்துள்ளது இந்தப் படம்.
கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்திலும் இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'குணா' படத்தின் 'கண்மணி அன்போடு' பாடல் இடம் பெற்றதுதான் படத்தின் ஹைலைட். அந்தப் படமும் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
மலையாள சினிமா ரசிகர்கள் மற்ற மொழிக் கலைஞர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் நேசித்துவிட மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இளையராஜா அதற்கு விதிவிலக்கானவர் என்பது மேலே சொன்ன படங்களின் வரவேற்பும், வசூலும் உணர்த்தும்.