நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
'தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு' என்ற சோகம் இந்த வாரம் முடியுமா, அடுத்த வாரம் முடியுமா எனப் பேசிப் பேசி போய்க் கொண்டே இருக்கிறது. இந்த 2024ம் ஆண்டின் நான்கு மாதங்கள் முடிய உள்ள நிலையில் லாபகரமான படங்கள் என ஒரு படத்தைக் கூட குறிப்பிட முடியாமல் உள்ளது.
கடந்த வாரம் ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'டியர்', விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. ஒரு கோடி வசூலையாவது கடந்ததா என்பதற்கான பதிலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கிடைக்கவில்லை.
அதே சமயம் கடந்த வாரம் வெளியான இரண்டு மலையாளப் படங்கள் 50 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஜித்து மாதவன் இயக்கத்தில், பஹத் பாசில், சஜின் கோபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஆவேஷம்' படம் 60 கோடி வசூலைக் கடந்துள்ளது. பிரணவ் மோகன்லால், தியன் சீனிவாசன், நிவின் பாலி, பாசில் ஜோசப், வினீத் சீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளிவந்த 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
மலையாள சினிமாவில் தொடர்ந்து சில படங்கள் 50 கோடி வசூலைக் கடந்து ஓடுவது மற்ற திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களே அதற்குக் காரணம் என்பது அனைவரது கருத்தாக உள்ளது.