ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் வட இந்திய, ஹிந்தி தியேட்டர் உரிமை சுமார் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. பிரபல வினியோகஸ்தரான அனில் தடானி 'அட்வான்ஸ் முறை'யில் அந்த உரிமையை வாங்கியுள்ளாராம். 'ஜவான்' படத்தின் தியேட்டர் உரிமை கூட 150 கோடிக்குத்தான் விற்கப்பட்டதாம். அப்படியிருக்க டப்பிங் படமான 'புஷ்பா 2' படம் அதைவிட 50 கோடி கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
400 கோடிக்கு அதிகமாக வசூலித்தால் மட்டுமே அந்த 200 கோடி ரூபாய் முதலீட்டை எடுக்க முடியும். இருந்தாலும் படம் அதை வசூலிக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கியுள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். 1000 கோடிக்கும் அதிகமான வசூலை 'புஷ்பா 2' எட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் படக்குழு.




