பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
கார்த்தி நடித்த 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர்தயாள் இயக்கத்தில், விஷ்ணு விஷால், கேத்தரின் தெரஸா, சூரி மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டு ஆரம்பமான படம் 'வீர தீர சூரன்'. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்படம் டிராப் ஆகியது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான போதே தலைப்பு அதிரடியாக உள்ளது என்று பேசப்பட்டது.
இப்போது விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க உள்ள விக்ரமின் 62வது படத்திற்கு 'வீர தீர சூரன்' என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும், டைட்டில் டீசரும் நேற்று வெளியானது. ஆனால், இப்படம் இரண்டாம் பாகமாக உருவாகும் என 'பார்ட் 2' என கூடவே சேர்த்துள்ளார்கள். இந்த இரண்டாம் பாகம் வெளியான பிறகு 'பார்ட் 1'ஐ தயாரித்து வெளியிடலாம்.
விஷ்ணு விஷால் நடிப்பில் ஆரம்பமான 'வீர தீர சூரன்' படத்தைத் தயாரித்த எவிஆர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் அத்தலைப்பை 'ரினீவல்' செய்யாமல் விட்டிருந்தால் மட்டுமே இப்போது விக்ரம் 62 படத்திற்கு இப்பெயரை வைத்திருக்க முடியும். இருந்தாலும் இந்த தலைப்பு விவகாரம் புதிய சர்ச்சையை ஆரம்பிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.