டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள சினிமாவில் இளம் நடிகர்கள் ஒன்றிணைந்து நடிப்பது புது விஷயம் இல்லையென்றாலும், அப்படிப்பட்ட படங்களில் நடிக்க அழைத்தால் தவறாமல் ஒப்புக்கொள்பவர் தான் நடிகர் உன்னி முகுந்தன். அந்தவகையில் தற்போது நிவின்பாலியுடன் மைக்கேல் என்கிற படத்தில் இணைந்து இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மம்முட்டி நடித்த ஹிட் படமான தி கிரேட் பாதர் படத்தை இயக்கிய ஹனீப் அதேனி தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். சில வருடங்களுக்கு முன் ஏற்கனவே துல்கர நடித்த விக்ரமாதித்யன் படத்தில் இதே நிவின்பாலியும் உன்னிமுகுந்தனும் இணைந்து நடித்திருந்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் க்ளைமாக்சில் ஒன்றிரண்டு நிமிடங்களே சந்தித்துக் கொள்ளும்படியான காட்சி மட்டுமே இருந்தது. ஆனால் இந்த ;மைக்கேலே படத்தில் கிட்டத்த இரண்டாவது ஹீராவாக நடிக்க உள்ளாராம் உன்னி முகுந்தன்.




