22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பிரபுதேவா-நயன்தாரா இடையே நடிகை குஷ்பு சமரச முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வந்த செய்தியை குஷ்பு மறுத்துள்ளார். மேலும் நான் தரகர் கிடையாது என்றும் கூறியுள்ளார். நயன்தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீதுள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரும் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபுதேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காதலை உதறி தள்ளிவிட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா தன்னுடைய இந்தி பட வேலைகளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் நயன்தாரா-பிரபுதேவா இடையே சமரம் செய்து வைக்க நடிகை குஷ்பு முயற்சி செய்வதாக தவகல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பிரபுதேவா-நயன்தாரா இருவருமே என்னுடைய நல்ல நண்பர்கள். அதிலும் பிரபுதேவா என்னுடைய நீண்டநாள் நண்பர். அவர் நடிக்க வருவதற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். என்னுடைய ஒரு படத்திற்கு அவர் தான் நடன அமைப்பாளர். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க கூடாது. நயன்தாரா-பிரபுதேவா விஷயத்திலும் அப்படிதான். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னையோ தெரியவில்லை அது அவர்களுடைய சொந்த விவகாரம். இதில் நான் தலையிட விரும்பவில்லை. நான் ஒன்றும் தரகர் கிடையாது. இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி கிளம்புகிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.