ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, ஆவணப்படமாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து 2024ல் 'நெட்பிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியிட்டது. இதில் நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. தன் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் படக் காட்சிகளை பயன்படுத்தியதாக நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே அதே ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க கோரி, 'சந்திரமுகி' படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் நஷ்டஈடு வழக்கு உள்ள நிலையில், மேலும் ஒரு நஷ்டஈடு வழக்கு வந்துள்ளதால், நயன்தாரா தரப்புக்கு தலைவலி அதிகமாகியுள்ளது.