பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
அரசியல் கட்சி துவங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறார். அப்படியே முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து அரசியல் ஆலோசனையும் ஈடுபட உள்ளார்.
நடிகர் கமல் அரசியல் கட்சி துவங்க உள்ளது உறுதியாகி உள்ளது. இதற்கு முன்னோட்டமாக தனது பிறந்தநாளின் போது மொபைல் ஆப் ஒன்று அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இதன் செயல்பாடு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். கட்சி துவக்கத்தின் முன்னோட்டமாக அவர், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். பின்னர், சென்னையில் உள்ள தனது வீட்டில் டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மம்தாவுடன் ஆலோசனை
இந்நிலையில், கோல்கட்டாவில் 23வது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கிறார். அதோடு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்ததும், மம்தாவை கமல் சந்தித்து, அரசியல் ஆலோனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்தாக இன்று காலை விமானம் மூலம் கோல்கட்டா கிளம்பி சென்றார் கமல்.