5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் | என் ஓட்டுக்கு விஜய்க்கு தான் - ஆல்யா மானசா பேட்டி |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான அங்கமாலி டைரீஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா ராஜன். இந்த படத்தை தொடர்ந்து மோகன்லால் நடித்த வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதைவிட அந்த படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடியதன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். அதன் பிறகு அய்யப்பனும் கோஷியம் படத்தில் பிரித்விராஜின் மனைவியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து பிசியான நடிகையாக மாறுவார் என எதிர்பார்த்தால் பெரிய அளவில் அவரை படங்களை பார்க்க முடியவில்லை. இதற்கு காரணம் அவரது உடல் எடை அதிகரித்தது தான் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது நடன வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். பலரும் அவரது நடன அசைவுகளை பார்த்து கிண்டலாக விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர். பலர் உருவ கேலியும் செய்திருந்தனர்.
இதுகுறித்து விளக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அன்னா ரேஷ்மா ராஜன், தான் கடந்த சில காலமாகவே தன்னுடல் தாங்கு திறன் நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் சில நேரங்களில் உடல் எடை தானாகவே கூடுகிறது, சில நேரங்களில் தானாகவே மெலிந்து விடுகிறது என்றும் கூறியுள்ள அவர் அதனால் தனது நடனம் குறித்து தயவுசெய்து உடல் ரீதியாக விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நடனம் என்பது தனது உயிர் என்றும் இப்படிப்பட்ட ஒரு உடல் ரீதியான பிரச்சனை இருப்பதால் அதற்காக வீட்டிலேயே சும்மா அமர்ந்து கொண்டு இருக்க முடியாது என்றும் கூறியுள்ள அவர் எனது நடனம் பிடித்திருந்தால் பாருங்கள்.. இல்லையென்றால் இப்படி கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.