பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சிவகார்த்திகேயன்-நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் வேலைக்காரன். இதற்கு முன்பு ரஜினி முருகனாக நடித்த சிவகார்த்திகேயன், இந்த படத்தில் ரஜினி படத்தின் தலைப்பில் நடித்திருக்கிறார். அதோடு, இதுவரை எட்டாக்கனியாக இருந்து வந்த நயன்தாராவுடனும் இந்த படத்தில் ரொமான்ஸ் செய்திருக்கிறார். கூடவே சினேகா, பகத்பாசில் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் இறுதியில் இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன்-நயன்தாரா சம்பந்தப்பட்ட சில காட்சிகளில் இயக்குனர் மோகன்ராஜாவுக்கு போதுமான திருப்தி இல்லாமல் இருந்ததை அடுத்து கடந்த சில தினங்களாக ஏவிஎம்மில் உள்ள ஒரு செட்டில் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டு நேற்றோடு முடிவடைந்திருக்கிறது.
அந்தவகையில், முதல் சுற்றில் சிவகார்த்திகேயன்-நயன்தாராவின் ரொமான்ஸ் தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொல்லி ரீ-ஷூட் நடத்திய மோகன்ராஜாவுக்கு தற்போது அவர்கள் நடித்த காட்சிகள் 100 சதவிகிதம் திருப்தியை கொடுத்திருக்கிறதாம்.