டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள், அவர்களாகவே எந்த விஷயத்தையும் பேசுவதில்லை. அவர்களைப் பேச வைப்பதே பிக் பாஸ் தான். தினமும் என்னென்ன நடக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு, எழுதி, அந்த ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்றபடி மற்றவர்களை நடிக்க வைத்து வேலை வாங்கும் ஒரு இயக்குனராகத்தான் 'பிக் பாஸ்' இருக்கிறார் எனப் பலரும் ஆரம்பித்திலிருந்தே சொல்லி வருகிறார்கள்.
இந்த திட்டமிட்ட நாடக அரங்கேற்றத்தை தமிழ் பிக் பாஸ்-ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் அழகாக நடித்துக் கொடுத்து நிகழ்ச்சியைக் காப்பாற்றி வருகிறார்கள். ஆனால், தெலுங்கில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களால் அதை 'இம்ப்ரொவைஸ்' செய்து நடிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு 'பிக் பாஸ்' நடத்திய நாடகம் நன்றாகவே புரிந்திருக்கும்.
நாடகம் 1 - எதிராளிகளான காயத்ரி, ஓவியா இருவரையும் நிருபவர்களாக நடிக்க வைத்தது
நாடகம் 2 - சினேகனிடம் ரைசா தன்னை ஒருமையில் பேச வேண்டாம் என்று சொன்னது
நாடகம் 3 - அடுத்த வாரம் எலிமினேட் ஆகாமல் இருந்தால் தலைவர் பதவிக்குப் போட்டி போடப் போடுகிறேன் என ஜுலி சொன்னது
நாடகம் 4 - ஓவியா, ஆரவ் இடையே மீண்டும் ஒரு நெருக்கமான நட்பை ஏற்படுத்தியது
நாடகம் 5 - திடீரென ஒரு காட்சியில் காயத்ரி, ஓவியாவிடம் 'முகரக்கட்டை' எனத் திட்டியதற்கு மன்னிப்பு கேட்டது
நாடகம் 6 - காயத்ரியும், ஓவியாவும் மனம் விட்டு பேசிக் கொண்டது
'பிக் பாஸ்' நாடகம், இனி, தீவிரமாகத் தொடரும்...