தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி | இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு | திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர் | தெலுங்கு சினிமா என்னை ஏமாற்றி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் | ஜவான் 2 தொடங்குவது எப்போது? அட்லி கொடுத்த விளக்கம் | 100 மில்லியனைக் கடந்த 'மோனிகா' வீடியோ பாடல் : அனிருத்திற்கு 45 |

பிரபல தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியரான பஞ்சு அருணாச்சலம் பிஏ ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியிருந்தார். தனது முதல் படமே பெரிய படமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய அவர் ரஜினி மற்றும் கமல்ஹாசனிடம் கால்ஷீட் வாங்கி வைத்திருந்தார்.
இந்த நேரத்தில் ரஜினி, கமல் இணைந்து நடித்த அவர்கள், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற படங்கள் சரியாக போகவில்லை. அதனால் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவு செய்தார்கள். ஆனாலும் அவர்கள் பஞ்சு அருணாச்சலத்திற்கு சேர்ந்து நடிப்பதற்காக கால்சீட் கொடுத்திருந்தனர்.
இதனால் பஞ்சு அருணாச்சலத்தை சமாதானப்படுத்த எஸ்.பி. முத்துராமனை தூதராக அனுப்பி வைத்தனர். 'ரஜினி, கமல் இருவரும் என் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள் அவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை தனித்தனி படங்களில் நடிக்கட்டும் அதற்குரிய சம்பளத்தை வாங்கிக் கொள்ளட்டும். இரண்டு பேருக்குமே தனித்தனியாக கதைகள் வைத்திருக்கிறேன்" என்று கூறினார் பஞ்சு அருணாச்சலம்.
அவர் சொன்ன கதை தான் கல்யாணராமன் மற்றும் ஆறிலிருந்து அறுபது வரை. இதில் 'ஆறிலிருந்து அறுவது வரை' படத்தை எஸ்பி. முத்துராமன் இயக்கினார். 'கல்யாணராமன்' படத்தை அவரது உதவியாளர் ஜி.என். ரங்கராஜன் இயக்கினார். இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி வெற்றி பெற்றது.