வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் 'எஸ் சரஸ்வதி' தெலுங்கில் மட்டும் ரிலீஸ் | விஜய் தேவரகொன்டா - ராஷ்மிகா வரவேற்பு: தமிழ், கன்னடம், ஹிந்தி திரையுலகினர் 'ஆப்சென்ட்' | தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' |

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக சொல்லியிருந்தனர். இருவரும் சினிமாவில் இளம் வயதில் நடித்த போது சில படங்களில் ஒன்றாக நடித்தனர். அதன்பின் தனித் தனியே கதாநாயகர்களாக மட்டுமே தொடர வேண்டும் என்று பேசி முடிவெடுத்து அதன்பின் 40 வருடங்களுக்கும் மேலாக இணைந்து நடிக்கவேயில்லை.
அவர்கள் இணையும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே இருந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்று தெளிவுபடுத்திவிட்டார். தற்போது அந்தப் படத்தின் இயக்குனர் யார் என்பதைத் தேர்வு செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
'ஜெயிலர் 2' படத்தைத் தற்போது இயக்கி வரும் நெல்சன் தான் அந்த இயக்குனர் என்கிறார்கள். அவர் சொன்ன கதை ரஜினி, கமல் இருவருக்கும் பிடித்துவிட்டதாம். பட அறிவிப்புக்கான வீடியோ முன்னோட்டம் ஒன்றின் படப்பிடிப்பையும் பிப்ரவரி மாதம் படம் பிடிக்க வேலைகள் நடந்து வருகிறதாம். அறிவிப்பை வெளியிட்ட பின்பு ஒரு இடைவெளிக்குப் பிறகுதான் படத்தின் படப்பிடிப்பும் நடக்க உள்ளதாம்.
'ஜெயிலர் 2' படத்தை முடித்த உடன் நெல்சன் இந்தப் படத்தை ஆரம்பிப்பாரா, அல்லது ஏற்கெனவே பேசி வைத்திருந்த தெலுங்குப் படம் ஒன்றை இயக்கி முடித்த பின் வருவாரா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.




