ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினி நடிக்கும் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். விரைவில் அதற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதேபோல் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த படத்திற்கான புரொமோ வீடியோ படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜு மேனன் எடுக்கிறார். புரொமோ வீடியோவில் நெல்சனும் அனிருத்தும் வர இருப்பதாகவும் தகவல்.
ஜெயிலர் 2 படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் நெல்சன், ரஜினியின் அடுத்த படத்திற்கான வேலைகளை இப்போதே தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் ஹீரோயின் யார் ,வில்லன் யார் மற்ற நடிகர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. படத்தை பெரிய பட்ஜெட்டில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினி, கமல் இணயும் படம் என்பதால் இரு தரப்புக்கும் நெருக்கமான நடிகர்கள் தாங்கள் ஒரு சீனிலாவது இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.




