விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் |
'பிரேமம்' படப் புகழ் நிவின் பாலி தற்போது தமிழில் 'ரிச்சி' படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்க உள்ள இரண்டு படங்களில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளான த்ரிஷா மற்றும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
ஷியாம் பிரசாத் இயக்கும் 'ஹே ஜுட்' படத்தில் த்ரிஷாவுடனும், தியான் சீனிவாசன் இயக்கும் 'லக் ஆக்ஷன் டிராமா' படத்தில் நயன்தாராவுடனும் ஜோடி சேருகிறார்.
தென்னிந்தியத் திரையுலகின் இரண்டு முக்கிய கனவுக் கன்னிகளான த்ரிஷா, நயன்தரா ஆகியோருடன் ஒரே சமயத்தில் நிவின் பாலி ஜோடி சேர்ந்துள்ளது முன்னணி நடிகர்களுக்கு மிகவும் பொறாமையாக உள்ளதாம். நயன்தாரா அவ்வளவு சீக்கிரத்தில் புதுமுக நடிகர்களுடனோ, அல்லது வளரும் நடிகர்களுடனோ நடிக்க சம்மதிக்க மாட்டார்.
ஆனால், மலையாளத் திரையுலகின் தற்போது நடிகர்களில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக இருக்கும் நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்ததில் ஆச்சரியமில்லை.
த்ரிஷாவுடன் நடிக்கும் 'ஹே ஜுட்' படம் கடந்த வாரம் ஆரம்பமானது. 'லவ் ஆக்ஷன் டிராமா' படம் விரைவில் ஆரம்பமாக உள்ளது.