'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சினிமாவில் 20 வருடங்களை வெற்றிகரமாக கடந்த பின்னும் நடிகை திரிஷா தற்போதும் முன்னணி நடிகையாக பரபரவென பிசியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா ஐடென்டிட்டி என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகனாக நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க, வினய் ராய் வில்லனாக நடிக்கிறார்..
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடிப்பில் பாரன்சிக் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இரட்டை இயக்குனர்கள் அகில் பால் மற்றும் அனாஸ்கான் இருவரும் இந்த படத்தை இயக்கி வருகிறார்கள். முந்தைய படத்தைப் போலவே இந்த படமும் ஒரு புலனாய்வு திரில்லர் படமாக உருவாகி வருகிறது. சமீபகாலமாக ஈரோட்டில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக வேறு ஒரு லொகேஷனுக்கு மாறி உள்ளது. படப்பிடிப்பு தளத்திலிருந்து இதுறித்த சில புகைப்படங்களையும் படக்குழுவினர் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.