பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
1975ம் ஆண்டு வெளிவந்த படம் நாளை நமதே. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். லதா, நம்பியார், நாகேஷ், எம்.ஜி.சக்ரபாணி உள்பட பலர் நடித்த படம். கே.எஸ்.சேதுராமன் இயக்கி இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இயக்கி இருந்தார். இது இந்தியில் சூப்பர் ஹிட்டான யாதோங்கி பாராத் என்ற படத்தின் ரீமேக். சிறுவயதில் பிரிந்து சென்ற மூன்று சகோதார்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிற கதை. எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று.
தற்போது நாளை நமதே டைட்டிலில் விஷால் நடிக்கிறார். இதில் எம்.ஜி.ஆர்., போலவே விஷால் மூன்று வேடத்தில் நடிக்கிறார். இயக்குனர் பொன்ராமின் உதவியாளர் வெங்கடேசன் இயக்குகிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார், அபி அண்ட் அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரிக்கிறார்கள்.