வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் | பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் |
தனுசுடன் நடித்த கொடி படம் திரிஷாவின் டோட்டல் இமேஜையே மாற்றிவிட்டது. அதுவரை திரிஷா என்றாலே சாப்ட்டான நடிகை. அதிரடியான கதாபாத்திரத்திற்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்றுதான் ஓரங்கட்டி வைத்திருந்தனர். அதோடு, நாயகி படத்தில் அவர் கையில் கத்தியுடன் போஸ் கொடுத்ததைகூட கிண்டல் செய்தனர். ஆனால் கொடி படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பல டைரக்டர்களுக்கு அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. திரிஷாவையும் அதிரடி ஆவேசமான நடிகையாக்க முடியும் என்று மோகினி, சதுரங்கவேட்டை-2, கர்ஜனை, 96 ஆகிய படங்களில் எதிரும் புதிருமான வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மேலும், தனது ரூட் மாறி விட்டதால் இனிமேல் முன்பு போன்று மரத்தை சுற்றி டூயட் பாடும் வேடங்களை தவிர்த்து வருகிறார் திரிஷா. அந்த வகையில், சில டைரக்டர்கள் சாப்ட்டான கதைகளில் நடிக்க அவரிடம் கதை சொல்லச் சென்ற போது, அந்த மாதிரி கதைகளுடன் என்னை இனிமேல் யாரும் தேடி வராதீர்கள் என்று கூறிவிட்டாராம் திரிஷா. அதோடு, பாலிவுட் நடிகைகள் வித்யாபாலன், பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள் நடித்த சில படங்களை சுட்டிக்காட்டி, இந்த மாதிரியான கதைகளில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன். அதனால் என்னை வேறு கோணத்தில் யோசித்து எனக்காக கதை ரெடி பண்ணுங்கள் எ ன்று சொல்லி அனுப்புகிறாராம் திரிஷா.