புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2004ல் வெளிவந்த படம் 'கில்லி'. விஜய்யின் முக்கியமான படங்களில் இன்றும் கில்லிக்கு முக்கிய இடம் உண்டு. இந்தப்படம் இப்போது ரீ-ரிலீஸ் முறையில் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் 350 தியேட்டர்களிலும் தமிழ், கேரளா, கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும் வெளியாகி உள்ளது. விஜய்யின் புதிய படம் ரிலீஸாவது போன்று ரசிகர்கள் இந்த படத்திற்கு வரவேற்பு கொடுத்து கொண்டாடி உள்ளனர்.
இதுபற்றி த்ரிஷா வெளியிட்ட பதிவில், ‛‛ 'கில்லி' அசுர வெற்றி அதிர்வுகளுடன் மீண்டும் பொழுது விடிந்துள்ளது. 2004ல் தொடங்கிய பயணம் 2024ல் முழு வட்டம் நிறைவடைந்து மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது'' என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.