'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சந்தானம் நடித்து திரைக்கு வந்த வடக்குப்பட்டி ராமசாமி படம் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இங்க நான் தான் கிங்கு என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனந்த நாராயணன் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார். அவர்களுடன் தம்பி ராமையா, மனோபாலா, முனீஸ் காந்த், பாலா சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகிறது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது மே மாதம் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக சந்தானம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.