நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் |
நியூ நார்மல் பிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் இளஞ்செழியன் தயாரிப்பில் நக்ஷா சரண் நடிக்கும் படம் 'பைக் டாக்சி'. கவுண்டமணி நடித்த 'எனக்கு வேறு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' மற்றும் பின்னணிப் பாடகி ராஜலட்சுமி கதையின் நாயகியாக நடித்த 'லைசென்ஸ்' படங்களை இயக்கிய கணபதி பாலமுருகன் எழுதி இயக்குகிறார். ஏ.ஆர்.ரெஹானா இசையமைக்கிறார்.
ராமராஜன் நடித்து வரும் 'சாமானியன்' மற்றும் சுசீந்திரன் தயாரித்த 'மார்கழி திங்கள்' படங்களில் நடித்த நக்ஷா சரண் முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவர் தவிர வையாபுரி, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது “வித்யா எனும் பைக் டாக்சி ஓட்டும் பெண், ஒரு நாளில் சந்திக்கும் 6 மனிதர்களின் கதை தான் இப்படம், ஒரு நாள் 6 மனிதர்கள், 6 கதைகள் என மிகச் சுவாரஸ்யமாக இருக்கும்”என்றார்.