அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கடந்த வருடம் பொன்னியின் செல்வன், லியோ, ரோடு என அடுத்தடுத்த படங்களை கொடுத்து மீண்டும் திரையுலகில் ஒரு விறுவிறுப்பான பயணத்தை தொடங்கியுள்ளார் த்ரிஷா. இந்த வருடமும் தமிழில் அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைப், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக ஐடென்டிட்டி என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. த்ரிஷா இங்கே படப்பிடிப்பில் கலந்து கொள்வதை கேள்விப்பட்டு ஏராளமான ரசிகர்கள் த்ரிஷாவை பார்ப்பதற்காக அவரது கேரவன் முன்பாக கூடினார்கள். அவரும் கேரவனில் இருந்தபடி ரசிகர்களுக்கு கை காண்பித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.