2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாலிவுட்டின் முன்னணி நடிகையான வித்யா பாலன் ரீல்ஸ் வீடியோ போடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். சமீப காலங்களில் தமிழ் வீடியோக்களை அதிகம் போட்டு வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு டி ராஜேந்தர் டயலாக் ஒன்றை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
நேற்று அந்தக் கால ஹிட் பாடலான 'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா' பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ ஒன்றைப் போட்டுள்ளார். மேலும், “தோ அவுர் தோ பியார்' படத்தின் குடும்பத் திரையிடலில், ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. சிறு வயதில் எனது பெற்றோர்களுடன் டிவியில் முதல் முறை பார்த்த எனது அபிமானப் பாடல்களில் ஒன்று இது. அதனால்தான் தமிழ் பிராமணப் பெண்ணான நான் 9 கஜப் புடவையில் 'மடிசார் மாமி'யாக,” எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரே நாளில் அந்த வீடியோவிற்கு 5 லட்சம் வரையிலான லைக்குகள் கிடைத்துள்ளது.
வித்யா பாலன் நடித்த 'தோ அவுர் தோ பியார்' ஹிந்திப் படம் கடந்த வாரம் வெளியாகி உள்ளது.