அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு |
ரீ-ரிலீஸ் பட வசூல் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது 'கில்லி'. இந்தப்படம் ஒரு ரீமேக் படம் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில், மணிசர்மா இசையமைப்பில், மகேஷ்பாபு, பூமிகா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் 2003ம் ஆண்டு சங்கராந்திக்கு ஒக்கடு என்ற பெயரில் வெளிவந்த படம் அது.
அதன்பின் அப்படத்தைத் தமிழில் 'கில்லி' என்ற பெயரில் விஜய், த்ரிஷா நடிக்க ரீமேக் செய்து 2004ம் ஆண்டு வெளியிட்டனர். இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து கன்னடத்தில் மெஹர் ரமேஷ் இயக்க, புனித் ராஜ்குமார், அனுராதா மேத்தா, பிரகாஷ்ராஜ் நடிக்க 2006ல் ‛அஜெய்' என்ற பெயரில் வெளியிட்டனர். அங்கும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
2008ல் பெங்காலியில் 'ஜோர்' என்ற பெயரிலும், 2008ல் 'மாதே ஆனிடெலா லாகே பகுனா' என்ற பெயரில் ஒடியா மொழியிலும், பங்களா மொழியில் 'போலோனா கோபுல்' என்ற பெயரில் 2009லும், 2015ல் ஹிந்தியில் 'தீவார்' என்ற பெயரிலும், 2021ல் 'கபாடி' என்ற பெயரில் சிங்களத்திலும் ரீமேக் ஆகியுள்ளது.