பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
விஜய்யுடன் வாரிசு என்ற படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்தார் ராஷ்மிகா மந்தனா. தற்போது தெலுங்கு ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் மீடியாவுக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில், விஜய் நடிப்பில் நான் பார்த்த முதல் படம் கில்லி. அந்த படத்தில் இடம்பெற்ற அப்படி போடு என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார் ராஷ்மிகா. அதோடு விஜய் நடித்த கில்லி படம் மகேஷ்பாபு நடித்த போக்கிரி படத்தின் ரீமேக் என்று ஒரு தவறான தகவலை அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
அதையடுத்து மகேஷ்பாபு நடித்த ‛ஒக்கடு' படத்தின் ரீமேக்தான் விஜய் நடித்த கில்லி என்று ராஷ்மிகாவின் சோசியல் மீடியாவில் கமெண்ட் கொடுத்த ரசிகர்கள், மகேஷ் பாபு நடித்த போக்கிரி படத்தின் ரீமேக்கில்தான் விஜய்யும் ‛போக்கிரி' என்ற பெயரிலேயே நடித்தார் என்றும் கூறி வந்தார்கள். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில், தான் தவறான தகவலை வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.