லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார் ஜெயம் ரவி. இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெயம் ரவி - ஆர்த்தி இருவருமே ஆஜராகி இருந்தார்கள். அப்போது ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்தியஸ்தர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.
அதைக் கேட்ட நீதிபதி, ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் மனம் விட்டு பேசுங்கள். மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து அவர்கள் இருவரிடத்திலும் ஒரு மணி நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த விசாரணையின்போது, அவர்கள் இருவரும் தாங்கள் மீண்டும் சேர்ந்து வாழப் போவதாக அறிவிப்பார்கள் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.