படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
நடிகர் ரவி மோகன் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து குற்றம் சாட்டி வந்த நிலையில் கோர்ட் அறிவுரையை ஏற்று இருவரும் விமர்சிப்பதை தவிர்த்தனர்.
இதனிடையே ரவி மோகன் தனது மூத்த மகன் ஆரவின் 15வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளின்போது மகன்கள் ஆரவ், அயான் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு 'என் குறும்பர்கள்' என பதிவிட்டு இருந்தார் ரவி மோகன்.
இந்நிலையில் 'எச்சரிக்கையாக இருக்கவும், சூழ்ச்சி கூட அன்பு போன்று தெரியும்' என இன்ஸ்டாவின் ஸ்டோரியில் பதிவிட்டார் ஆர்த்தி. பின்னர் அதை நீக்கி விட்டார்.