2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
விஜய் ஆண்டனி நடித்த ‛மார்கன்' படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்தவர் அஜய் தீஷன். இவர் விஜய் ஆண்டனியின் அக்கா மகன். விஜய் ஆண்டனிக்கு மருமகன். சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் மருமகன் அஜய்க்காக ‛பூக்கி' என்ற படத்தை தயாரிக்கிறார் விஜய் ஆண்டனி. இன்று இந்த பட பூஜை நடந்தது. சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசுகையில், "நான் 10க்கும் அதிகமான படங்களை தயாரித்து இருக்கிறேன். நான் நடிக்காத முதல் படம் இது. அடுத்து மற்ற ஹீரோக்களை வைத்தும் படம் தயாரிக்கிறேன். நான் நடித்த சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் இயக்க, பரிதி கதை எழுதி இருக்கிறார். தனுஷா ஹீரோயின்" என்றார்.
பிச்சைக்காரன் படத்திற்கு பின் மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஒரு படத்தில் நடிக்க போகிறார். அனேகமாக இது பிச்சைக்காரன் 3ஆக இருக்கலாம். இந்த படத்திலும் விஜய் ஆண்டனி மருமகன் அஜய் நடிக்கிறார்.