ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

பிரசாந்த் ராமன் இயக்க லிங்கா, சரத் ரவி நடிக்கும் தாவுத் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ராதாரவி. அவர் பேசுகையில், ‛‛கால் மூட்டு ஆபரேஷன் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டேன். 2 ஆண்டுகள் பெட்டில் இருந்து இப்போது மீண்டு விட்டேன். சினிமாக்காரன் கால் ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லை என்றால் அவரை காணவில்லை என்பார்கள். ஒரு காலத்தில் வில்லன் என்றால், குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்றால் என்னை கூப்பிடுவார்கள். இப்போது மாறிவிட்டேன். நேரடியாக வில்லத்தனம் செய்வதில்லை. ஆர்டர் போடுகிற இடத்தில் இருக்கிறேன். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஒரு பாடல் வருகிறது. ஆங்கிலத்தில் தலைப்பு தான் வைத்தார்கள். இப்போது பாடலே வருகிறது. தமிழை கொன்று விடாதீர்கள். இப்போது தியேட்டரில் கூட்டம் குறைவாக இருக்கிறது. ரஜினிகாந்தே ரத்தத்தை நம்பி படம் எடுக்கிறார். நாம எல்லாம் சாதாரணமான ஆள். ஆரம்பம் முதலே ரத்தத்தை காண்பிக்கலாம். நிறைய படங்கள் வந்தாலும் அதெல்லாம் தியேட்டரில் ஓட வேண்டும். ஒடிடியில் பார்க்கலாம் என மக்கள் இருந்து விடக்கூடாது. தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்க'' என்றார்.




