பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? |
ஹனுமன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பரீட்சையமானவர் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா. இவரின் மிராய் படம் செப்டம்பர் 12ல் தமிழிலும் வருகிறது. மிராய் குறித்து அவர் பேசியதாவது : மிராய் என்றால் எதிர்காலம், மந்திரகோல் என அர்த்தம். ஹனுமன் படத்துக்கு கிடைத்த வரவேற்பு அதிகம். இன்றும் அந்த பட சீன்களை சொல்லி பாராட்டுகிறார்கள். அதில் ஹனுமன் என்றால், இதில் ராமர், காசி பின்னணியில் கதை நடக்கிறது. இப்படிப்பட்ட பேண்டசி கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன்.
ஹனுமன் படத்தில் வரலட்சுமி இருந்தார். இதில் ஸ்ரேயா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஜெயராம் ஆகியோரும் இருக்கிறார்கள். கார்த்திக் கட்டமனேனி இயக்கி உள்ளார். ஆக்ஷன், அட்வெஞ்சர், பேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய்.
இந்த ப்படத்தை நாங்கள் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்திய படங்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ளது. இதற்கு முன் வெளியான ஹனுமன் திரைப்படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அதிவேக சண்டைக் காட்சிகளை அமைக்க முயற்சித்துள்ளோம். அதற்காக, கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை தாய்லாந்திலிருந்து வரவைத்தோம். அதுமட்டுமின்றி, நான் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களுக்கு சென்று 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். இப்படத்தில் நீங்கள் காணும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நான் நேரடியாக நடித்துள்ளேன். இப்படம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக, இமாலயா, இலங்கை போன்ற பல இடங்களுக்கு சென்று சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.