மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'தக் லைப்'. படம் படுதோல்வி அடைந்தாலும் ரஹ்மானின் இசையில் சில பாடல்கள் படத்தில் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதில் ஒன்று 'முத்த மழை' பாடல்.
சிவ ஆனந்த் எழுதி தீ பாடிய பாடல் இது. ஆனால், அந்த ஒரிஜனல் பாடலை விட படத்தின் இசை வெளியீட்டின் போது பாடகி சின்மயி பாடிய மேடைப் பாடல் 100 மில்லியன் பார்வைகளை யு டியுப் தளத்தில் கடந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான அந்த மேடைப் பாடல் வீடியோ 100 மில்லியனைப் பெற்றுள்ளது. ஆனால், அந்தப் பாடலின் ஒரிஜனல் வீடியோ பாடல் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி வெறும் 10 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது ஆச்சரியம்தான்.
மேடையில் பாடப்பட்ட ஒரு பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். மேடையில் தான் பாடிய ஒரு பாடல் இப்படி ஒரு சாதனையைப் பெற்றிருப்பது குறித்து பாடகி சின்மயி, “எனது மேடை நிகழ்ச்சிக்கு 100 மில்லியன் பார்வைகள். கடவுளுக்கு, ரஹ்மான் சாருக்கு மற்றும் இதை சாத்தியமாக்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி! அற்புதங்கள் சாத்தியமே. நம்பிக்கையைப் பிடித்து உண்மையை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.