ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' | பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் அறிமுகமான இளைய திலகம் | ஜனநாயகன் பட விவகாரம் ; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் |

'பீஸ்ட், டாடா' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ். 'மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகர் தீபக் பரம்போல் ஆகிய இருவருக்கும் இன்று (ஏப்., 24) கேரள மாநிலம், குருவாயூரில் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றது. அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. கேரள முறைப்படி நடந்த திருமண நிகழ்வில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

தற்போது வளர்ந்து வரும் சில மலையாள நடிகைகள் சில படங்களில் நடித்து புகழ் பெற்றதுமே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள். அபர்ணா நடித்த 'பீஸ்ட், டாடா' இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடிய படங்கள். இருந்தாலும் தமிழில் அவர் அடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.