அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ள படம் டாடா. அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கி உள்ளார். இந்த படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது.
அபர்ணா தாஸ் கூறுகையில், “கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ்ப்படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின்தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமாவில் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்”என்றார்.
இதுகுறித்து கவின் கூறும்போது ”அபர்ணாவை நான் முதன்முதலில் 'பீஸ்ட்' செட்டில்தான் பார்த்தேன். கதை மேல் இருந்த நம்பிக்கை அவர் மேலேயும் இருந்தது. சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்”என்றார்.