படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! | பின்னணி குரல் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்த '3பிஹெச்கே' இயக்குனர் | 'டைட்டானிக்' ரிலீஸ் : தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கும் கலையரசன் | 2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு? | கோலிவுட்டில் அதிரடிக்கு தயாராகும் பீஸ்ட் நடிகை |
கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின், அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'டாடா'. இப்படத்திற்கு விமர்சகர்களிடம் பாராட்டும், ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தைப் பார்த்து தனுஷ் பாராட்டியதாக படத்தின் கதாநாயகன் கவின், கதாநாயகி அபர்ணா தாஸ் இருவரும் பதிவிட்டுள்ளார்கள். அது குறித்து கவின், “ஹாய் கவின், நா தனுஷ் பேசறேன்…… நான் கேட்பது உண்மைதானா என என்னுடைய மூளைக்குப் புரிய சில வினாடிகள் ஆனது. அதிலிருந்து நான் இன்னும் உண்மையில் வெளிவரவில்லை, இங்கு இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன்.
'டாடா' படத்தைப் பார்த்த பிறகு தனுஷ் சாரிடமிருந்து ஒரு அழைப்பைப் பெற்றது உண்மையிலேயே மகிழ்வான ஒரு தருணம். உங்களது அனைத்துப் படங்களையும் பார்த்து, உங்களது அற்புதமான திறமையைப் பார்த்து வியப்படைந்து திகைத்துப் போயிருக்கிறேன். இன்று உங்களிடமிருந்து ஒரு அழைப்பு வந்ததை வெறும் நன்றியுடன் சுருக்கமாக முடித்துவிட முடியாது. வளரும் நடிகர்களைப் பாராட்டுவதன் மூலம் உங்கள் மீது பெரும் மரியாதை இருக்கிறது. உங்களது 'வாத்தி' படத்திற்கு எனது வாழ்த்துகள், உங்களிடமிருந்து எப்போதும் சிறந்த படங்களை எதிர்பார்க்கிறேன், சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எங்களைப் போன்ற வளரும் கலைஞர்களைப் பாராட்டும் உங்கள் மனதிற்கு மிக்க நன்றி,” என அபர்ணா தாஸும் குறிப்பிட்டுள்ளார்.