2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தங்கலான்'. 1800களின் இறுதிக்கட்டம், 1900ம் ஆண்டுகளின் ஆரம்பக் கட்டத்தில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. கர்நாடகா மாநிலத்தின் கேஜிஎப் தங்கச் சுரங்கத்தில் அந்த காலகட்டங்களில் தமிழர்கள் அதிக அளவில் வேலைக்குச் சென்றனர். அவர்களது வாழ்வியல் சம்பந்தப்பட்ட படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்திற்காக நடிகர் விக்ரம் தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோரும் மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க தற்போது ஆங்கிலேயே நடிகரான டேனியல் கால்டாகிரோன் இணைந்துள்ளார்.
1998ல் வெளிவந்த 'லெகியோநேய்ர்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் அவர் நடித்து வெளிவந்த 'த பீச், லாரா க்ரோப்ட் டாம்ப் ரைடர் த க்ராடில் ஆப் லைப், மற்றும் ஆஸ்கர் விருது வென்ற 'த பியானிஸ்ட்' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர். பல்வேறு டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர்.
'தங்கலான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மட்டுமல்லாமல் டுவிட்டர் தளத்திலும் புதிய கணக்கைத் துவங்கி அறிமுகமாகியுள்ளார். அவரை விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் வாழ்த்தி வரவேற்றுள்ளார்கள்.