பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இறைவி படத்திற்கு பிறகு தரமணி, பேரன்பு, காண்பது பொய், பலூன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இதில் எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு பலூன் படத்தில் மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இதற்கிடையே ஜெய் நடித்து முடித்துள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் அஞ்சலி.
மேலும், மகேந்திரன் ராஜா மணி என்பவர் இயக்கும் இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக சகுனி பிரணிதா நடித்துள்ளார். அவர்களுடன் காளி வெங்கட், கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் என பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த காதல் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் க்ளைமாக்சில் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சில சீன்களில் வந்து கலக்கியிருக்கிறாராம் அஞ்சலி. ஜெய்யுடன் பலூன் படத்தில் கமிட்டாகி நடித்து வந்தபோது, இந்த கெஸ்ட் ரோல் பற்றி கேள்விப்பட்ட அஞ்சலி, தானே முன்வந்து நடித்ததாகவும் சொல்கிறார்கள்.