அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இரண்டு தளங்களிலும் ஒன்றாக கால் பதித்து இரண்டிலுமே வெற்றி பெற்றார். ஆனாலும் அதைத்தொடர்ந்து டைரக்ஷன் பக்கம் போகாமல் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சசிகுமாரிடம் அவரது ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது பேசிய சசிகுமார், அது உண்மையிலேயே தான் சிரித்த சிரிப்பு அல்ல என்றும் அந்த படத்தின் டப்பிங்கின் போது நகைச்சுவை நடிகராக நமோ நாராயணனை தனக்கு பதிலாக சிரிக்க வைத்து டப்பிங்கில் சேர்த்துக் கொண்டதாகவும், ஆனால் இப்போது வரை அதை தனது சிரிப்பாக நினைத்து பலரும் மிமிக்ரி பண்ணி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல அந்தப் படத்தில் ஜெய் ஸ்டைலாக தலையை கொதி விடுவது இயல்பிலேயே தன்னுடைய மேனரிசமாக இருந்தது என்றும் சுப்ரமணியபுரம் படத்தில் அந்த ஸ்டைலை ஜெய்க்கு கற்றுக் கொடுத்ததாகவும் கூறிய சசிகுமார் அதன்பிறகு சுந்தரபாண்டியன் படத்தில் நடித்தபோது அதேபோன்று தானும் ஸ்டைலாக தலையை கோதியபோது இயக்குனர் தன்னிடம் சார் இது ஜெய் ஸ்டைல் போல இருக்கிறது, வேறு மாதிரி செய்யுங்கள் கூறினாராம். இப்படி தன்னுடைய ஸ்டைல் ஒன்று ஜெய்க்கு கை மாறியது குறித்து இன்னொரு புதிய தகவலையும் குறிப்பிட்டுள்ளார் சசிகுமார்.