செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
'தரமணி' படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு ராக்கி, அஸ்வின்ஸ், பொன் ஒன்று கண்டேன் படங்களில் நடித்தவர் வசந்த் ரவி. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்தார். தற்போது வெப்பன், இந்திரா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். வசந்த் ரவி தனது பிறந்த நாளை முன்னிட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மீடியாக்கள் சுட்டிக் காட்டிய நிறை, குறைகளால்தான் நான் வளர்ந்து வருகிறேன். நிறைய பேர் என்னிடம் 'எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் 'பொன் ஒன்று கண்டேன்' படம் வந்திருக்கிறது.
நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே 'ஜெயிலர்' படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. 'உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை' என்று ரஜினி சார் சொன்னார். அது உண்மையிலேயே பெரிய விஷயம். தற்போது 'வெப்பன்' என்ற ஆக்ஷன் படத்திலும், 'இந்திரா' என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது.
'ஜெயிலர்2' வருகிறது என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். 'ஜெயிலர்' படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், 'ஜெயிலர்2' என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது. ஆனால், 'ஜெயிலர்' கிளைமாக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம், பார்ட் 2க்கான லீட் இருக்கு சார் என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிப்பேன். என்றார்.