எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

உலக சினிமாவுக்கான ஒட்டுமொத்த விருதாக ஆஸ்கர் இருந்தபோது பாடல்களுக்கு என்று கிராமி விருது தனியாக உள்ளது. அனிமேஷன் படங்களுக்கென்று தனி விருது உள்ளது. நடனத்திற்கு தனி விருது உள்ளது. அதுபோன்று சண்டை பயிற்சிக்கான சர்வதே விருது 'டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் அவார்ட்ஸ்' விருது. இதில் பெரும்பாலும் ஹாலிவுட் சண்டை கலைஞர்களே போட்டியிடுவார்கள். அவர்களே வெற்றியும் பெறுவார்கள்.
இந்த ஆண்டுக்கான விருது பட்டியிலில் ஜான்விக் சாப்டர் 4, மிஷன் : இம்பாசிபிள்-டெட் ரெக்கனிங், எக்ஸ்ட்ராக்ஷன் 2, பேல்லரினா போன்ற படங்களுடன் 'ஜவான்' திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சண்டை காட்சிகளை வடிவமைத்திருப்பவர் தமிழகத்தை சேர்ந்த அனல் அரசு.
தென்னிந்தியாவின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குனர்களில் ஒருவர் 'அனல்'அரசு. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிங்கம், சிங்கம்-2, கத்தி, மெர்சல், பிகில் உள்பட பல படங்களில் பணியாற்றியவர். தற்போது இந்தியன்-2 போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார். அதேப்போல மலையாளத்தில் உருமி, காம்ரேட் இன் அமெரிக்கா, ஷைலாக் மற்றும் தெலுங்கில் மிர்ச்சி, ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். ஹிந்தியில் ரவுடி ரத்தோர், தபாங்-2, தபாங்-3, சுல்தான், ரேஸ்-3, 'ஜவான்' படங்களிலும் பணியாற்றி உள்ளார்.
தற்போது விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதோடு, இயக்குனராக அறிமுகமாகிறார்.