300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கடந்த மாதம் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை, உடைமைகளை இழந்தனர். அந்த சமயத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் இந்திய துணை ராணுவமும் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு பலரின் உயிரை காப்பாற்றினர்.
குறிப்பாக கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்காக துணை ராணுவத்தினர் அமைத்த ஒரு தற்காலிக பாலம் மூலமாக மீட்பு பணி விரைவாக நடைபெற்று உயிரிழப்பு பெரிய அளவில் தடுக்கப்பட்டது. இதற்கு அப்போதே பொதுமக்களிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்தன.
இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் இருவரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட 122 இன்பான்ட்ரி பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்து தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து அவர்களை கவுரவித்துள்ளனர். இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.