அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தனியார் அமைப்பு ஒன்று தாதா சாகேப் பால்கேவின் பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறது. அரசு சினிமாவின் உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கி வரும் நிலையில் தனியார் அமைப்பு ஒன்று அதே பெயரில் விருது வழங்குவது குறித்து சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் 'ஜவான்' படத்தில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருது அந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. அதேப்போல் இப்பட இசையமைப்பாளர் அனிருத்திற்கு சிறந்த இசைக்கான விருது வழங்கப்பட்டது.
ஷாரூக்கான் பேசும்போது "நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு" என்றார்.
நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட விருதுகள் குறித்தும் விமர்சனங்கள் வரத் தொடங்கி உள்ளது.