‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

கடந்த 2006ம் ஆண்டில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த படம் ' டான்'. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான் இரண்டாம் பாகத்திலும் ஷாருக்கான் நடித்து கடந்த 2011ம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பர்ஹான் அக்தர் தயாரித்து, இயக்கினார்.
சமீபத்தில் பர்ஹான் அக்தர் டான் 3ம் பாகத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக வைத்து இயக்குவதாக அறிவித்தார். இப்படத்திற்கு நம்ம ஊர் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கூடுதல் திரைக்கதை எழுதுகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.