ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'டன்கி'. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. கடந்த ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து, ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளனர். இந்த பாகத்தை யார் இயக்குகிறார் என இன்னும் முடிவாகவில்லை. இந்த வருட இறுதியில் இதன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.