பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஆள் அமைதியாக இருப்பார், ஆனால் செய்கிற வேலைகள் பயங்கரமாக இருக்கும், அவர் நல்லவரா, கெட்டவரா, சைக்கேவா, விபரமான ஆளா என்று கண்டுபிடிக்க முடியாது. இதுதான் விஜய் ஆண்டனியின் முதல் படத்திலிருந்து அவரது கேரக்டரின் இலக்கணம். இடையில் இந்தியா பாகிஸ்தான் படத்தில் மட்டும் வேற மாதிரி நடித்திருந்தார். அதனால்தானோ என்னவோ அந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. மீண்டும் பழைய பாணிக்கே திரும்பி விட்டார்.
நேற்று வெளியான சைத்தான் பட டீசர் இதுவும் விஜய் ஆண்டனியின் வழக்கமான பார்முலா படம் என்றுதான் சொல்கிறது. கருவிழி இல்லாத கண்களுடன் மிரட்டுகிறார், சமஸ்கிருத ஸ்லோகங்களின் பின்னணியில் ஸ்லோ மோஷனில் நடந்து வருகிறார். இரண்டு மூன்று கெட் அப்களில் வருகிறார். வீட்டு சுவரின் மீது அமர்ந்து தியானம் செய்கிறார். படுக்கையறை காட்சியில் கூட பயங்கரமாக முறைக்கிறார்.
கடவுள் மாதிரி நல்லா இருந்த மனுஷன் ஏன் சைத்தான் ஆனான் என்பதுதான் படத்தின் ஒன் லைன். இந்த ஒன் லைன்தான் அவரது எல்லா படத்திலும். ஆனாலும் மேக்கிங்கிலும், ஒளிப்பதிவு மற்றும் இசையிலும் மிரட்டுகிறது டீசர். விஜய் ஆண்டனியின் கேரியருக்கு சைத்தான் ஸ்பீட் பிரேக் போடுமா, இல்லை டாப் கீயரை போடுமா என்பதை அறிய தீபாவளி வரை காத்திருக்க வேண்டும்.